சரிகமப சீனியர் 5ன் இரண்டாம் இறுதி சுற்றுப்போட்டியாளர் யார்? பட்டையை கிளப்பிய போட்டியாளர்கள்..
சரிகமப சீனியர் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நடைபெற்று வருகிறது. கடந்த 4 வாரங்களாக டிக்கெட்டு ஃபினாலேவுக்கான போட்டிகள் நடந்து வருகிறது.
ஏற்கனவே, சிறப்பாக பாடி அசத்திய சுஷாந்திகா தான் சரிகமப சீனியர் சீசன் 5ன் முதல் இறுதி சுற்றுப்போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அடுத்து 2வது இறுதி சுற்றுப்போட்டியாளர்கள் யார் தேர்வு செய்யப்படுவார் என்று 2 வாரங்களாக போட்டியாளர்களிடையே கடுமையான போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த வாரம், டூயட் ரவுண்ட்டில் முன்னாள் சரிகமப போட்டியாளர்களுடன் சீசன் 5 போட்டியாளர்கள் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த ரவுண்ட்டில் சிறப்பாக பாடி யார் 2வது இறுதி சுற்று போட்டியாளர் இடத்தை நிரப்புவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தற்போது வெளியான இந்த வார பிரமோவில் இனியா, ஸ்ரீஹரி, ஷிவானி கோல்டன் பசர் வாங்கியுள்ளனர். இதில், சபேசனுக்கு பலரும் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.