சரிகமப சீனியர் 5ல் எண்ட்ரி கொடுத்த திவினேஷ்!! கண்ணீர் விட்டு அழுத பாடகர் ஸ்ரீநிவாஸ்..வீடியோ

Zee Tamil Saregamapa Lil Champs Divinesh Saregamapa Seniors Season 5
By Edward Jun 21, 2025 05:30 AM GMT
Report

திவினேஷ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. சமீபத்தில் நடந்து முடிந்த சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் 4ன் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு 10 லட்சம் மதிப்பிலான தொகை பரிசாக அளிக்கப்பட்டதுடன் மெல்லிசை இளவரசன் விருதையும் வழங்கினர். சரிகமப நிகழ்ச்சியின் போது தன்னுடைய தந்தைக்கு புது வண்டி வாங்கி வாங்க வேண்டும் என்று சொன்னதும் பாடகர் ஸ்ரீநிவாஸ், அந்த கனவை நிறைவேற்றினார்.

சரிகமப சீனியர் 5ல் எண்ட்ரி கொடுத்த திவினேஷ்!! கண்ணீர் விட்டு அழுத பாடகர் ஸ்ரீநிவாஸ்..வீடியோ | Saregamapa Seniors Season 5 Divinesh Entry Video

சரிகமப சீனியர் 5

இந்நிலையில் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. மெகா ஆடிஷனின் போது திவினேஷ் எண்ட்ரி கொடுத்து அனைவரது கவனத்தை பெற்றதோடு, ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்வேதா மேனனை அழ வைத்திருந்தார்.

இந்த வாரம் Duet Round நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர் பிரதீபாவுடன் திவினேஷ் இணைந்து பாடியுள்ளார். இருவரின் குரல்கள் அரங்கில் இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. திவினேஷ் - பிரதீபா பாடிய பிரமோ வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.