எனக்கு அவர் வேணும்..மறைந்த கணவரால் கண்ணீர் விட்டு அழுத சரிகமப பவித்ரா..
சரிகமப சீனியர் சீசன் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வாரவார புதுபுது ரவுண்ட்களை சந்தித்து வரும் போட்டியாளர்களுக்கு இந்தவாரம், Dedication Round நடந்துள்ளது. அதில், கணவரை இறந்த போட்டியாளர் பவித்ரா, தக் லைஃப் படத்தின் அஞ்சு வண்ண பூவே பாடலை உருக்கமாக பாடியிருக்கிறார்.
பவித்ரா
இந்த பாடலை பாடும்போது, கண்ணுக்கு தெரிந்தவர்களுக்காக பாடுவார்கள், ஆனால் நான் கண்ணுக்கு தெரியாத என் கணவருக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். இந்த மேடைக்கு வரக்காரணமே அவர் தான். மாமா உங்களுக்காக தான் பாடுறேன் என்று பவித்ரா கூறியிருக்கிறார்.
மேலும், அழகான குருவிக்கூடு போல நாங்க சந்தோஷமா இருந்தோம், அவர் வேணும் என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனை பார்த்த நடுவர்கள் மற்றும் அரங்கில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.