சரிகமப சீசன் 5: வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை.. என்னது தங்கம் கூடவா?

Zee Tamil TV Program Saregamapa Seniors Season 5
By Bhavya Jul 10, 2025 07:30 AM GMT
Report

சரிகமப சீசன் 5

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5விற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். பாடல் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தான் டாப்பில் இருந்தது, தற்போது அந்த நிகழ்ச்சியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சரிகமப நிகழ்ச்சி உள்ளது.

கடைசியாக சிறுவர்களுக்கான சீசன் பிரம்மாண்டமாக நடந்து முடிய இப்போது பெரியவர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

சரிகமப சீசன் 5: வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை.. என்னது தங்கம் கூடவா? | Saregamapa Winner Gifts Details

தங்கம் கூடவா? 

இந்நிலையில், எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த 5வது சீசனில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ. 10 லட்சமும், இரண்டாவது ரன்னர் அப் போட்டியாளருக்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கள் வழங்கப்பட உள்ளதாம்.

அதோடு மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ₹5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட உள்ளதாம்.   

சரிகமப சீசன் 5: வெற்றியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை.. என்னது தங்கம் கூடவா? | Saregamapa Winner Gifts Details