நடிகை சரிதாவின் சகோதரி இந்த நடிகையா!! இது உங்களுக்கு தெரியுமா?
நடிகை சரிதா
தென்னிந்திய சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், 200 படங்களுக்கு மேல் மற்ற நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்தும் பிரபலமானவர் தான் நடிகை சரிதா. 4 தமிழக விருதுகள், கலைமாமணி விருது, கன்னட சினிமாவில் மாநில விருது என்று தென்னிந்திய சினிமாவில் மறக்கமுடியாத நடிகையாக திகழ்ந்தார் சரிதா.

1978ல் தப்புத் தாளங்கள் என்ற படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான சரிதா, கடைசியா சிவகார்த்திகேயன்ன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.
விஜி சந்திரசேகர்
அவரைபோல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போடு சகோதரியை போன்று பிரபலமானவர் தான் நடிகை விஜி சந்திரசேகர். இவர் 1981ல் ரஜினி நடிப்பில் தில்லு முல்லு படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

இப்படத்திற்கு பின் 12 ஆண்டுகள் கழித்து கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்து, பிரியங்கா, இந்திரா, பார்த்தாலே பரவசம், சமஸ்தானம், ஆயுத எழுத்து, ஜோர், ஆரோகணம், மதயானைக்கூட்டம், கடைக்குட்டி சிங்கம், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், கேப்டன் மில்லர், மாமன், டிஎன்ஏ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் நடித்த சகோதரிகளான சரிதா - விஜி சாந்திரசேகர் இருவரும் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.