வடிவேலு மாதிரி ஒருத்தனை என் வாழ்க்கையில் பாக்கலை!! கண்டபடி திட்டிய நடிகர்..

Vadivelu Gossip Today
By Edward Oct 28, 2023 02:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் வைகைப்புயலாகவும் புகழ்பெற்று பிரபலமானவர் நடிகை வடிவேலு. சமீபகாலமாக வடிவேலு பற்றி அவருடன் நடித்த சக நடிகர் நடிகைகள் கடுமையாக திட்டி பேட்டியளித்து வருகிறார்கள்.

தங்களை வடிவேலு வாழவிடவில்லை என்று கூறி வடிவேலுவின் உண்மை முகத்தை உடைத்திருக்கிறார். அப்படி நடிகர் திருப்பூர் சதா சிவம் வடிவேலுவை கண்டபடி திட்டி வருகிறார்.

அப்படி ஒரு படத்தில் வடிவேலுவை அடிக்கும் ஒரு காட்சியில் தான் நடிக்க வந்த போது என் முகத்தை முறைத்தபடி பார்த்து இவனா, இந்த மூஞ்சி சரியில்லை.

என்னை அடிக்கப்போறான், இவனுக்கெல்லாம் நடிக்கத் தெரியாது என்றும், உங்க ஆளா, காசு வாங்கிட்டியா என்று இயக்குனரிடம் கேட்டு கேலி செய்திருக்கிறார்.

ஆனால் ஒரு காட்சியில் பின்னாடி போய் முரட்டுதனமாக அடித்ததை இயக்குனர் பாராட்டியதாகவும் சாதா சிவம் கூறியிருக்கிறார்.