உன் மனைவி ஆடையை கவனி.. நடிகையின் ஆடையை விமர்சித்த சதீஷை வெளுத்து வாங்கிய இயக்குனர்

Sunny Leone Sathish Chinmayi
By Edward Nov 10, 2022 09:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்து வருபவர் நடிகர் சதீஷ். எதுவாக் இருந்தாலும் அதனை மேடையில் வெளிப்படையாக, வேடிக்கையாக பேசி சர்ச்சையிலும் சிக்கி வருபவர்.

சமீபத்தில் சன்னி லியோன் லீட் ரோலில் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அப்படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சன்னி லியோன் சேலையிலும் தர்ஷா குப்தா மாடர்ன் ஆடையிலும் வந்திருந்தனர்.

இதுகுறித்து சதீஷ் மேடையில் பேசியபோது, பாலிவுட்டில் இருந்து வந்த சன்னி லியோனியே சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா எப்படி வந்திருக்கார்ன்னு பாருங்க என்று கிண்டலாக விமர்சித்திருந்தார்.

இந்த விசயம் இணையத்தில் வைரலாக பாடகி சின்மயி சதீஷை கண்டித்து கருத்தினை போட்டுள்ளார். மேலும் இயக்குனர் நவீன் ஒரு டிவிட்டை போட்டு கடுமையாக சதீஷை வெளுத்து வாங்கியிருக்கிறார்.