கல்யாண நாளில் நடிகைகளுடன் சேட்டை செய்த ஆர்யா!! மனைவியிடம் போட்டுக்கொடுத்த நடிகர்..

Arya Nikhila Vimal Sayyeshaa Sathish Actress
By Jai Mar 11, 2026 06:30 AM GMT
Report

ஆர்யா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, ஜிம் வொர்க்கவுட், சைக்கிளிங் உள்ளிட்ட பல விஷயங்களை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். 45 வயதாகும் ஆர்யா, நடிகை சாயிஷாவை 2019ல் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

கல்யாண நாளில் நடிகைகளுடன் சேட்டை செய்த ஆர்யா!! மனைவியிடம் போட்டுக்கொடுத்த நடிகர்.. | Sathish Reports Sayyessha About Arya Gym Photos

தற்போது மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். மார்ச் 10 ஆம் தேதி அன்று ஆர்யா - சாயிஷா தங்களின் 7வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி

இந்நிலையில், திருமண நாளின்போது, தன்னுடைய #ஆர்யா40 படத்தில் நடித்து வரும் நடிகை நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் இணைந்து ஜிம் ஒர்க்கவுட் செய்துள்ள புகைப்படத்தையும், சேட்டை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஆர்யாவின் இந்த பதிவு வைரலாக, ஜிம்மில் நடிகைகளுடன் அரட்டை அடிப்பதை நடிகர் சதீஷ் பார்த்துள்ளார்.

கல்யாண நாளில் நடிகைகளுடன் சேட்டை செய்த ஆர்யா!! மனைவியிடம் போட்டுக்கொடுத்த நடிகர்.. | Sathish Reports Sayyessha About Arya Gym Photos

நடிகர் சதீஷ்

இதன்பின் ஆர்யாவின் பதிவிற்கு, நானெல்லாம் ஜிம்முக்குப் போனா, வந்த வேலையை மட்டும்தான் பார்க்குறது ஆர்யா டார்லிங் என கோபமான எமோஜியை போட்டு ஜஸ்ட் ஃபார் யுவர் ஜெனரல் நாலேட்ஜ் என்று கூறி ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் எக்ஸ் தள பக்கத்தை டேக் செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், வயித்தெரிச்சலில் பொண்டாட்டிக்கிட்ட மாட்டிவிட்டீங்களே சதீஷ் என்று கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.