இதுல என்ன தயக்கம் இருக்கு!! அப்படி நடிக்காததுக்கு காரணமே இதான்.. கட்டப்பா சொன்ன சீக்ரெட்..
Sathyaraj
Actors
Tamil Actors
By Jai
வில்லன் நடிகராக கேரியரை ஆரம்பித்து தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து மாஸ் காட்டி நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் சத்யராஜ், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

சத்யராஜ் ஹீரோ
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தான் ஹீரோவாக நடித்த அடுத்தடுத்த 10 படங்கள் தோல்வியை கண்டது. இதனிடையே கேரக்டர் ரோல்களில் நடிக்க அதிக காசு கொடுப்பதாக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன்வந்ததாகவும் அதனால் தான் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருவதாகவும் சத்யராஜ் கூறியிருக்கிறார்.
இதை சொல்வதற்கு தனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்று சத்யராஜ தெரிவித்துள்ளார். தற்போது தனக்கே உரிய நக்கல், நையாண்டியையும் விடாமல் தொடர்ந்து கேரக்டர் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார் சத்யராஜ்.