ஏன்டா அந்த படத்தில் நடிச்சோம்னு இருந்தது!! சத்யராஜ் கூறிய உண்மை..

Jai Sathyaraj Nayanthara
By Edward Nov 30, 2023 06:25 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ஆரம்பித்து கதாநாயகனாகவும் குணச்சித்திர நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சத்யராஜ். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்துள்ள சத்யராஜிற்கு பாகுபலி படத்தின் கட்டப்பா மிகப்பெரிய அங்கிகாரத்தை இந்திய சினிமாவில் கொடுத்தது.

தற்போது, அன்னப்பூரணி படத்தில் நடிகை நயன் தாரா, ஜெய்யுடன் நடித்துள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சத்யராஜ் பேட்டி கொடுத்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

ஏன்டா அந்த படத்தில் நடிச்சோம்னு இருந்தது!! சத்யராஜ் கூறிய உண்மை.. | Sathyaraj Open Worst Acting In Movie Annapoorani

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிச்சதில் எந்த படம் பிடித்தது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யராஜ், படத்தில் பிடிக்காமல் நடிப்பதில்லை, பிடித்ததால் தான் நடிக்கிறோம், நல்லா சூப்பரா ஓடினால் ரொம்ப சந்தோஷம், ஓடவில்லை என்றால் வருத்தம் என்று எடுத்துக்கலாம், நாம் ஒன்றும் புத்தர் கிடையாது எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள.

சந்தோஷமா நினைப்பது எல்லா படமும் ஆனால் பெருமையாக எடுப்பது பெரியராக நடித்த பெரியார் படம் தான் என்றும் அவருடன் வாழ்ந்தவர்கள் படத்தை பார்த்து அழுதார்கள் அதனால் தான்.

விஜய் ஒதுக்கிய விசயத்தை தான் மகன் சஞ்சய் எடுத்திருக்காரா!! உண்மையை வரவழைத்த சிவகார்த்திகேயன்..

விஜய் ஒதுக்கிய விசயத்தை தான் மகன் சஞ்சய் எடுத்திருக்காரா!! உண்மையை வரவழைத்த சிவகார்த்திகேயன்..

இந்த படத்தை ஏன் டா பண்ணினோம் என்று நினைக்கும் படங்கள் நிறையவே இருக்கிறது. அதை சொன்னால் அவர்கள் மனசு புண்படும், காசு வாங்கிட்டு நடிக்கும் போது தெரியலையான்னு கேட்பாங்க. அப்படிப்பட்ட இருக்கும் ஆனால் அதை சொல்ல முடியாது என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.