சீன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
Box office
Scene
By Karthick Raja
மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் சீன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா முதல் முறையாக நடித்துள்ளார். மேலும், வில்லனாக அனைவரையும் மிரட்டியிருந்தார் நடிகர் நஸ்லன். இவர்களுடன் ஆனந்த்ராஜ், லால், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சீன் திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 250+ கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.