என்னடா இது நம்ம பசங்களுக்கு வந்த சோதனை..அடுத்தடுத்து அறிவிப்பு!

School Students
By Jeeva Nov 07, 2021 11:30 AM GMT
Report

தமிழகத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புள்ளாகியிருக்கிறது.

இதனிடையில் காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகிவருவதாக வானிலை ஆய்வு மையம் முன்பே அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்தடுத்து விடுமுறை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மழைக்காரணமாக மறுபடியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இப்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அடுத்தது விடுமுறை மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.