ஆட்டிப்படைக்கும் ரெட் ஜெயண்ட்.. ஸ்டாலினிடம் உதயநிதியை போட்டுக்கொடுத்த உளவுத்துறை..
பெரும்பாலான தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கலை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. சமீபகாலமாக வெளியாகும் பல படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் கைப்பற்றி விநியோகம் செய்து வருகிறது.
விக்ரம் முதல் கோப்ரா படம் வரை ரெட் ஜெயண்ட்ட்டின் ஆட்சி தான் தமிழ் சினிமாவைஅ ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் கூட உதயநிதி மிரட்டி தான் விக்ரம் படத்தினை வாங்கியதாக செய்திகள் வெளியானது. இந்த விசயம் முதல்வர் காதுக்கு உளவு செய்யும் சிலர் புகாரளித்துள்ளனர்.
ஆனால் உண்மையில் ரெட் ஜெயண்ட் மூவிஸால் தமிழ் படங்களுக்கு நல்லது தான் நடக்கிறது என்று பலர் கூறி வருகிறார்கள். அதற்கு காரணம், உதயநிதி வந்த பிறகு தான் சுதந்திரமாக படத்தினை ரிலீஸ் செய்ய முடிகிறது என்று தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.
அதிலும் கணக்கு வழக்குகளை சரியாக காட்டியும் வருகிறார்களாம். முன்பெல்லாம் வெளியிடும் விநியோகஸ்தர்கள் படத்தின் வசூலை இழிப்பறியடித்து தான் தயாரிப்பாளர்களுக்கு பங்கினை கொடுப்பார்கள். ஆனால் ரெட் ஜெயண்ட் உடனடியாக செட்டில்மெண்ட் கொடுத்துவிடுகிறார்களாம்.
அதனால் தான் தயாரிப்பாளர்களும் முன்னணி நடிகர் இயக்குனர்கள் ரெட் ஜெயண்ட்டை நாடி வருகிறார்கள். படத்தின் கதையையும் படத்தையும் பார்த்தப்பின் தான் உதயநிதி வெளியிட முடிவெடுக்கிறாராம். இதெல்லாம் முதலமைச்சர் காதுக்கு செல்ல ரெட் ஜெயண்ட் மூவிஸை கூப்பிட்டு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளாராம்.