மனிஷா யாதவ் மட்டுமில்ல பிரபல நடிகைக்கும் தொல்லை கொடுத்த சீனு ராமசாமி.. வெடிக்கும் சர்ச்சை!!
சீனு ராமசாமி - மனிஷா யாதவ் விவாகரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, சீனு ராமசாமி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், நான் சீனு ராமசாமி தொடர்பாக கொடுத்த பேட்டியை அந்த யூடியூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்கள். நீக்கினாலும் இதை குறித்து நான் பேசுவேன்.
நடிகை மனிஷா யாதவ் மட்டும் இல்லை வேறு சில நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நீர்ப்பறவை படத்தில் முதல் முதலில் நடிகை பிந்து மாதவி நடித்து இருந்தார். அந்த சமயத்தில் சீனு ராமசாமி அவரை தொல்லை செய்தார். இதனால் அந்த படத்தில் இருந்து பிந்து மாதவி வெளியேறினார்.
இதனை அடுத்த இன்னொரு நடிகையும் சீனு ராமசாமி தொல்லை செய்தார். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட்ட விரும்பவில்லை. தற்போது அந்த நடிகை திருமணமாகி செட்டிலாகிவிட்டார் என்று பிஸ்மி கூறியுள்ளார்.