சோனியா அகர்வாலை வீட்டிற்கு அழைத்து சென்ற தனுஷ்.. ஷூட்டிங்கில் தனுஷை ஓங்கி அறைந்த செல்வராகவன்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி மக்கள் கவர்ந்தவர் தான் செல்வராகவன். இவர் 2006 -ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
செல்வராகவன் இயக்கத்தில் 2003 -ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படத்தில் தனுஷ், சோனியா அகர்வால் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள குறிப்பிட்ட காட்சியில் தனுஷ் சோனியா அகர்வாலை வீட்டிற்கு அழைத்து செல்லும் காட்சி அமைந்திருக்கும். இதை செல்வராகவன் அருமையாக எடுத்திருப்பார்.
இப்படத்தின் ஷூட்டிங் போது தனுஷ் சில காட்சிகளில் சரியாக நடிக்கவில்லையாம். அதனால் கோபம் அடைந்த செல்வராகவன் தனுஷை ஓங்கி அறைந்து விட்டார். பின்னர் படக்குழுவினர் அவரை சமாதானம் படுத்தி நடிக்க வைத்தார்களாம்.