படமே தனுஷ் கதை தான்.. அவர் வரல அதான் நான் நடிச்சேன்? உண்மையை உடைத்த செல்வராகவன்

Dhanush Selvaraghavan Naane Varuven Kalaippuli S Thanu
By Edward Oct 11, 2022 05:00 AM GMT
Report

உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

தனுஷ் - செல்வராகவன்

ஆனால் வசூல் ரீதியாக நானே வருவேன் படம் தோல்வியை சந்தித்து வருவதாகவும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நானே வருவேன் படத்தின் தோல்விக்கு பொன்னியின் செல்வன் படமும் ஒரு காரணமாக கூறியிருந்தனர். ஆனால் தனுஷ் இப்படம் 29 ஆம் தேதி வெளியாகவிருப்பது ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும் போகப்போக அது முற்றிலுமாக பிடிக்கவில்லையாம். அந்த தேதியில் வெளியிட வேண்டாம் என்று தனுஷ் படக்குழுவினரிடம் எவ்வளவோ சொல்லி பார்த்திருக்கிறார்களாம். ஆனால் அதை மீறி படத்தை வெளியிட்டு தனுஷை அசிங்கபடுத்தியிருக்கிறார்கள்.

ஏன் அந்த காட்சியில் நடித்தே

இதனால் தான் தனுஷ் நானே வருவேன் படத்திற்காக எந்தவொரு பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளாராம். ஆனால் இதுகுறித்து செல்வராகவன் ஒரு பேட்டியில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, பிரமோஷன் எல்லாம் நடந்தது. தனுஷிற்கு தனிப்பட்டது ஒன்று இருக்கிறது. அவர் ஏன் வரவில்லை என்று அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ஏன் அந்த காட்சியில் நடித்தேன் என்றால், அந்த ரோலில் நடிக்கவிருந்த நடிகர் அன்று வரவில்லை. சில பிரச்சனையால் அவர் அன்ற ஷூட்டிற்கு வரவில்லை என்பதால் நான் நடித்தேன் என்று கூறியிருந்தார் செல்வராகவன். இருவருக்கும் சண்டை இருக்காமே என்ற கேள்விக்கு அப்படி எதாவது இருந்தால் நன்றாக, ஸ்வார்ஷ்யமாக இருக்கும். ஆனால் நடக்கவில்லையே என்று காமெடியாக பதிலளித்தார் செல்வராகவன்.