ஒரு வேல விவேகம் ஆகிடுமோ பீஸ்ட்! செல்வராகவன் பேச்சால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்..

nelson selvaraghavan sunpictures beast vivegam veeraraghavan
By Edward Apr 03, 2022 09:50 PM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரைலரை நேற்று சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.

அதேசமயத்தில் டிரைலர் பற்றிய விமர்சனங்கள் தவறுகள் பற்றியும் இணையத்தில் ட்ரோல் செய்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள். அப்படி விஜய்யின் ஏர்ஜெட் மாஸ்க், ஷூ, கூர்கா 2 போன்றவற்றை பயன்படுத்தி மீம்ஸ் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.

தற்போது செல்வராகவன் கதாபாத்திரத்தையும் விட்டு வைக்கவில்லை. செல்வராகவன் டிரைலரில் விஜய்யின் வீரராகவன் ரோலினை பெருமையாக பேசி வருவார். அதேபோல் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களையும் குறிப்பிட்டு விஜய் ரோலை புகழ்ந்து தள்ளியிருப்பார்.

இப்படி அவர் பேசுவது ரசிகர்கள் மத்தியில் ஒரு வேலை விவேகம் ஷூட்டா இருக்குமோ என்று கலங்கி வருகிறார்கள். விவேகம் படத்தில் அஜித்தை பற்றி விவேக் ஒபாராய் புகழ்ந்து வாய் ஜாலம் போட்ட காட்சி தான் செல்வராகவன் அப்படி பேசுவது நியாபகம் வருகிறது என்றும் கூறி வருகிறார்கள்.