செல்வராகவன் மனைவியை இப்போது பார்த்தால் என் ரியாக்ஷன்.. முதல் மனைவி பரபரப்பு!
செல்வராகவன்
இயக்குநர் கஸ்தூரிராஜா அவர்களுடைய மகனான செல்வராகவன் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமா உலகில் களமிறங்கினார்.
தொடர்ந்து பல படங்கள் நடித்து, இயக்கி வரும் செல்வராகவன் முதலில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அடுத்து கீதாசலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
பரபரப்பு பேச்சு!
இந்நிலையில், தற்போது சோனியா தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " சமூக அழுத்தங்களுக்காக பலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். நான் அப்படி இல்லை. எமோஷ்னலாக பாண்டிங் இருந்தது. அதனால் தான் திருமணம் செய்துகொண்டேன்.
பின் எங்கள் இருவருக்கும் ஒத்துவரவில்லை என தெரிந்தது. அதனால் நாங்கள் எந்த சண்டையுமின்றி ஒருவரையொருவர் பேசி பரஸ்பரமாக பிரிந்துவிட்டோம்.
நல்லவேளை அப்போதெல்லாம் சோஷியல் மீடியாக்கள் இல்லை. நான் இப்போதும் கீதாஞ்சலியை பார்த்தால் ஹாய், ஹலோ என்று பேசுவேன். அவருடன் நான் நல்ல நட்பில்தான் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.