ஒரே நேரத்தில் காதலி, அம்மா, தங்கை, மனைவி!! அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற ரஜினி பட நடிகை..
தமிழ் சினிமாவில் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து இங்கே முன்னணி இடத்தை பிடித்தவர்கள் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் இந்த விசயம் 70களில் இருந்தே இருந்து வருகிறது. அப்படி மலையாளத்தில் இருந்து தமிழில் எம்ஜிஆர் அவர்களுடன் பாசம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை செம்மீன் ஷீலா.
முதல் படமே வெற்றியை பெற்றதை அடுத்து, மீண்டும் புரட்சித்தலைவருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். படங்கள் மட்டுமில்லாமல் நாடகத்திலும் நடித்து பிரபலமான செம்மீன் ஷீலாவை மலையாள நடிகர் ராமண்ணா அங்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து மலையாளத்தில் பிஸியாக இருந்தும் தமிழில் குறிப்பிட்ட படங்களை மட்டும் தேர்வு செய்து வந்தார். தேசிய விருது வாங்கிய நடிகையாக திகழ்ந்து வந்தவரை இந்தியிலும் இழுக்க கூப்பிட்டனர்.
ஆனால் அங்கெல்லாம் வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறிவிட்டார்கள். அதன்பின் 80களில் அனைத்து ரோலிலும் தேர்வு செய்து நடித்து வந்தார். அப்படி நடிகர் பிரேம் நசீருடன் ஒரே நேரத்தில் 4 படத்தில் நடித்துள்ளாராம்.
அதுவும் காதலி, அம்மா, மனைவி, தங்கை என 4 ரோலில் அவருடன் நடித்துள்ளார். 2 மணிநேர இடைவெளியில் தான் 4 படத்திலும் நடித்து உலக சாதனையாகவும் அமைந்ததாம். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் நாசரின் அக்கா ரோலில் நடித்தும் இருந்தார் செம்மீன் ஷீலா.