திருமணத்தில் பத்திரிக்கையாளர்களை ஓடஓட துரத்திய ரஜினிகாந்த்.. ஆணவத்தில் பெரிய மனுஷன் செய்ற காரியாமா?
தமிழ் சினிமாவில் 80களில் சினிமா பயணத்தை ஆரம்பித்து தன் நடிப்பு, ஸ்டைல் போன்றவற்றால் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை இன்று வரையில் தக்கவைத்து வருபவர் ரஜினிகாந்த். தற்போது ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட மோசமான செய்தி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் தில்லு முல்லு படத்தின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிற்கு இரு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தார்.

ரஜினிகாந்த் - லதா திருமணமான சமயத்தில் பயங்கர பிஸி நடிகராக திகழ்ந்தவர். அப்போது லாதா என்ற பெண்ணிற்கும் எனக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு தகவலை கூறியுள்ளார். திருமணம் திருப்பதியில் நடக்கவுள்ளதால் பத்திரிக்கையாளர்கள் யாரும் வரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.
அதைமீறி பத்திரிக்கையாளர் ஒருவர், திருமணத்திற்கு அப்படி மீறி நாங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று ரஜினிகாந்திடம் கூறியிருந்தனர். அதற்கு ரஜினிகாந்த், மீறி வந்தால் தன்னுடைய ஸ்டைலில் உடைப்பேன் என்று எச்சரித்து மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியான பத்திரிக்கையாளர்கள் 1981 பிப்ரவரி 26 ல் திருப்பதியில் நடைபெற்ற ரஜினிகாந்த் - லதா திருமணத்திற்கு சென்றுள்ளனர்.
இயக்குனர் கே பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் மணமேடையில் உட்கார்ந்திருந்த ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை பார்த்து விட்டு அங்கிருந்து எழுந்து அவர்களை துரத்தி துரத்தி ஓடஓட விரட்டி இருக்கிறாராம்.
அப்போதில் இருந்தே சர்ச்சைக்கு பேர் போன ரஜினிகாந்த் இந்த விசயம் மிகப்பெரியளவில் பேசப்பட்டதாம்.