சீரியல் நடிகை அர்த்திகா திருமணத்திற்கு பின்னால் இவ்வளவு பிரச்சனையா..
நடிகை அர்த்திகா
ஜீ தமிழ் தொடரில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் கார்த்திகை தீபம். இந்த தொடர் மூலம் சின்னத்திரை நடிக்க வந்தவர் தான் அர்த்திகா. கருப்பழகியாக தொடரில் நடித்து மக்களையும் கவர்ந்துள்ளார்.
இவருக்கு அண்மையில் அவரது நீண்டநாள் காதலருடன் திருமணம் நடந்துள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றி நடிகை பேசியுள்ளார். அதில் அவர், நடிக்க வருவதற்கு முன் ஒரு கடையில் நான் வேலை செய்தேன்.
அங்கு இவர் அடிக்கடி வருவார் அப்படி தான் பழக்கம் ஏற்பட்டு காதல் வந்தது. இருவரின் மதமும் வேறு வேறு இதனால் அவரது வீட்டில் எங்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பெற்றோரை எதிர்த்து திருமணம் வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து பிரிந்தபோது எனது கணவர் மன அழுத்தத்தால் மருத்துவமனையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள இருவருக்கும் திருமணம் நடந்தது என கூறியுள்ளார்.