7 ஆண்டுகளுக்கு பின் தாயான பிரபல சீரியல் நடிகை.. வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

Pregnancy Tamil TV Serials TV Program
By Bhavya Nov 01, 2024 05:30 PM GMT
Report

நேகா கவுடா

சன் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண பரிசு' என்ற சீரியலில் நடித்து அதன் மூலம் மிகவும் பிரபலமானவர் பெங்களூரை சேர்ந்த நடிகை நேகா கவுடா.

அதை தொடர்ந்து, ரோஜா என்ற சீரியலில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.பின், பாவம் கணேசன் என்ற தொடரில் நவீனுக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் கடந்த 2018 - ம் ஆண்டு சந்தன் கவுடா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின், கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி மாதம் அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டா பக்கம் மூலம் தெரிவித்திருந்தார்.

7 ஆண்டுகளுக்கு பின் தாயான பிரபல சீரியல் நடிகை.. வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | Serial Actress Became Mother

அதற்கு பிறகு, தொடர்ந்து அவர் இன்ஸ்டா பக்கத்தில் கர்ப்பகால புகைப்படத்தையும், வளைகாப்பு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

7 ஆண்டுகளுக்கு பின் தாயான பிரபல சீரியல் நடிகை.. வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு | Serial Actress Became Mother

நெகிழ்ச்சி பதிவு 

இந்நிலையில், கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.