முதல் மகளின் பிறந்த நாள்!! சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
திவ்யா ஸ்ரீதர்
கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பின் கேளடி கண்மணி என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்து மகராசி, சன் டிவி-யின் செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்தும் வருகிறார்.
ஏற்கனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.
அதன்பின் சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை காதலித்து வந்த திவ்யா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டவர், இரண்டாம் முறை கர்ப்பமாகினார்.
அதன்பின் அர்னவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு வரை சென்று அதன்பின் குழந்தையை பெற்றெடுத்தார் திவ்யா.
தன்னுடைய இரு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர், தற்போது தன்னுடைய முதல் மகள் பிறந்தநாளில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.