ஆஹா கல்யாணம் தொடர் நாயகி அக்ஷயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய போட்டோஸ்

Tamil TV Serials Actress TV Program
By Bhavya Aug 29, 2025 12:30 PM GMT
Report

ஆஹா கல்யாணம்

விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டு 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் ஆஹா கல்யாணம்.

இந்த கதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்களுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுடன் திருமணம் நடக்கிறது. இந்த ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அக்ஷயா.

ஆஹா கல்யாணம் தொடர் நாயகி அக்ஷயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய போட்டோஸ் | Serial Actress Engagement Photos Goes Viral

 நிச்சயதார்த்தம் முடிந்தது!

இந்நிலையில், நடிகை அக்ஷயாவுக்கு நேற்று ஆகஸ்ட் 28ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது.

அவரது நீண்ட நாள் காதலர் ஜெய் என்பவரை தான் தற்போது கரம்பிடித்து இருக்கிறார் அக்ஷயா. இவர்கள் திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. ஜெய் சின்னத்திரையில் இயக்குநராக இருந்து வருகிறார்.