ஓட்டலில் கஞ்சாவுடன் பிடிப்பட்ட 27 வயதான இளம்நடிகை!! ரெய்டில் கையும்களவுமாக மாட்டிய நிலை

By Jon Jan 05, 2021 11:16 AM GMT
Report

சமீபகாலமான பிரபலங்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதும் கையும் களவுமாக பிடிப்பட்டதும் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. அந்தவகையில் பாலிவுட் பக்கம் மட்டும் இந்த பிரச்சனை இருந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பியுள்ளது.

சுஷாந்த் வழக்கில் பாலிவுட் நடிகைகள் பலரிடன் போதைபொருட்கள் பறிமுதல் செய்ததை அடுத்து பல இடங்களில் போலிசாரால் சோதனை செய்யப்பட்டது. அதில் மும்பையில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் ஸ்வேதா குமாரி என்ற பெண்ணிடம் கஞ்சா பொருட்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்பெண்ணிடம் விசாரித்ததில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த 27 வயதான இளம் நடிகை என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகை போதை பொருள் விவகாரத்தில் கைது செய்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.