துளி கூட மேக்கப் இல்லை, சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி.. அடையாளமே தெரியவில்லை!
கோமதி ப்ரியா
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சீரியல்களில் நாயகியாக நடித்து மக்களின் பேவரெட் லிஸ்டில் இருப்பவர் கோமதி ப்ரியா.
கடந்த 2018ம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓவியா என்ற தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர். அதன்பின் விஜய் டிவியில் வேலைக்காரன், இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார் கோமதி.
அடையாளமே தெரியவில்லை!
இந்நிலையில், கோமதி பிரியா ரயிலில் கேரளாவின் வர்க்கலா பீச்சுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அவர் அங்கு சற்றும் மேக்கப் இல்லாமல் கண்ணாடி அணிந்துகொண்டு ஆளே மாறி உள்ளார்.
இதனால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை போன்று தெரிகிறது. அங்கு அவர் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதோ,