ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டி!! சர்ப்ரைட் கொடுத்த சீரியல் நடிகை மதுமிதா..
எதிர்நீச்சல் மதுமிதா
சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது என்ற தகவல் வெளியாகி வருகிறது. இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை மதுமிதா.
கன்னடம், தெலுங்கு மொழி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த மதுமிதா, எதிர்நீச்சல் சீரியல் 2 ஆண்டுகள் நடித்து மிகப்பெரிய ஆதரவை பிடித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, கிளாமர் பதிவுகளையும் நீச்சல் உடையில் பீச்சில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.
சமீபத்தில், தன் நீண்ட நாள் ஆண் நண்பரை காதலிப்பதாக கூறி அவரின் நினைவுகளை வீடியோவாக பகிர்ந்திருந்தார். சில நாட்களுக்கு முன், இரவில் நடந்த ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
அங்கு எடுத்த புகைப்படங்களையும் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை இணையத்தில் தற்போது பகிர்ந்துள்ளார் சீரியல் நடிகை மதுமிதா.