அரசியல் தகுதியே இரண்டு பொண்டாட்டி மெயின்டெய்ன் பண்றதா? கஸ்தூரி பரபரப்பு கேள்வி

Kasthuri Tamil Cinema Actress
By Bhavya Aug 30, 2025 12:30 PM GMT
Report

கஸ்தூரி

ஆத்தா உன் கோவிலிலே படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. முதல் படத்தை தொடர்ந்து சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து நடித்து வந்தவர் திடீரென சின்னத்திரை பக்கமும் வந்தார், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இப்போது படங்கள் நடிக்கிறாரோ இல்லையோ, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி சுசுலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தகுதியே இரண்டு பொண்டாட்டி மெயின்டெய்ன் பண்றதா? கஸ்தூரி பரபரப்பு கேள்வி | Kasthuri About Keeping Two Wife

பரபரப்பு கேள்வி

இந்நிலையில், நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவை, ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதுடன் சிலர் தொடர்பு படுத்தி வருகிறார்கள்.

அதில், " தமிழ்நாட்டில் அரசியல் அடிப்படை தகுதியே இரண்டு பொண்டாட்டி மெயின்டெய்ன் பண்றது தான் போல. இங்கு எத்தனை பிள்ளைகளோ? கட்சியை யாரு யாரு எத்தனை கூறு போட போறாங்களோ" என்று பதிவு செய்துள்ளார்.