அவர் என் கணவர் இல்லை, fraud.. சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா காட்டம்!

Tamil TV Serials Actress TV Program
By Bhavya Aug 26, 2025 01:30 PM GMT
Report

ஸ்வேதா

விஜய் டிவியின் பாப்புலர் தொடர்களில் ஒன்றான சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. இவரது காதலர் என கூறிக்கொண்டு ஆதி என்பவர் பிரபல youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார்.

அந்த பேட்டியில், ஸ்வேதா உடன் அவர் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு திருமணம் நடந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார்.

அவர் என் கணவர் இல்லை, fraud.. சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா காட்டம்! | Serial Actress Open Post About Her Private Life

கணவர் இல்லை!

இந்நிலையில், தற்போது ஸ்வேதா அவரது இன்ஸ்டா தளத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், " ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட நபர், அவரை என் கணவர் என்று பொது இடங்களில் கூறி வருகிறார். அவர் ஒரு ஃபிராடு என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

அவருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் காவல்துறை அவரை தேடி வருகின்றது. அவர் என் பெயரை பயன்படுத்தி, நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம் என்று பொய்யான கதையை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, நான் அவரை மிகவும் நம்பியிருந்தேன், ஆனால் பின்னர் தான் அவரது உண்மையான முகம் மற்றும் குற்றச் செயல்கள் குறித்து அறிந்தேன்" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.