விவாகரத்துக்கு பின் இவருடன் தொடர்பில் இருக்கும் சீரியல் நடிகை! முற்றுப்புள்ளி வைத்த ஹரிப்ரியா

serial haripriya serilactress vigneshkumar hazar
By Edward Mar 23, 2022 02:25 AM GMT
Report

சின்னத்திரையில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் கனா காணும் காலங்கள்.. அந்த சீரியல் பல நட்சத்திரங்கள் நல்ல இடத்தினை பிடித்து பிரபலமாகிவிட்டனர். அதில் நடித்த நடிகைதான் ஹரிபிரியா இசை. தற்போது கண்மணி உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை வாணி ராணி சீரியலின் போது காதல் ஏற்பட்டு பின் திருமணமும் செய்து கொண்டனர். பின் குழந்தை இருக்கும் நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஹரிபிரியா தொகுப்பாளருடன் நடிகருமான அசார் என்பவருடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஹரிபிரியா இணையத்தில் ஒரு செய்தியை பகிர்ந்திருக்கிறார். எங்களுக்கு எந்த ஜாதி, மதம், எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை.

ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ, கணவரோ கிடையாது. மகிழ்ச்சியுடன் பேசுவது என்னுடைய பிறப்புரிமை. இதனால் தவறு என் மேல் இல்லை, அதை தவறாக பார்ப்பவர்கள் மேல் தான் உள்ளது என ஹரிப்ரியா பதிவிட்டுள்ளார்.

இதனால் ஹரிப்பிரியா மற்றும் அசார் நட்பாகத்தான் பழகி வருவதாக ஹரிப்பிரியா தெரிவித்துள்ளார். ஒரு பெண் ஆணுடன் பேசினால் அதை தவறாக தான் பார்ப்பார்கள். இதை எப்போது நிறுத்தப்போகிறார்கள் என்று பலர் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.