விவாகரத்து ஆன கையோடு மறுமணத்திற்கு தயாரான சீரியல் நடிகை ரிஹானா

Tamil TV Serials
By Yathrika Jun 24, 2024 10:30 AM GMT
Yathrika

Yathrika

Report

நடிகை ரிஹானா

தமிழ் சின்னத்திரையில் நாயகன்-நாயகியாக நடிப்பவர்களை தாண்டி துணை கதாபாத்திரங்கள், அம்மா, அக்கா., தங்கை என நடிப்பவர்கள் கூட இப்போது மக்களிடம் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். 

அப்படி சன், விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இப்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வருபவர் ரிஹானா.

அண்மையில் ஒரு பேட்டியில் இவர், எனக்கு திருமணம் நடந்து இப்போது பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் தான் விவாகரத்து கிடைத்தது, அதற்கான பத்திரங்கள் இப்போது தான் வந்தது. 

எனக்கு 2 குழந்தைகள் உள்ளார்கள், எனக்கான வாழ்க்கையை வாழவும் நான் விரும்புகிறேன். இதனால் கண்டிப்பாக நான் மறுமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார். 

விவாகரத்து ஆன கையோடு மறுமணத்திற்கு தயாரான சீரியல் நடிகை ரிஹானா | Serial Actress Reehana About Second Marriage