இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை ரேஷ்மா! வைரலாகும் வீடியோ
Serials
Tamil TV Serials
By Edward
சின்னத்திரை சீரியல்களில் சக நடிகர் நடிகைகளுடன் ஜோடியாக நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் இருப்பவர்கள் தான் நடிகை ரேஷ்மா - நடிகர் மதன்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த இருவரும் கடந்த 2021ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் ரேஷ்மா சீரியலில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது மதன் - ரேஷ்மா இருவரும் துளசி மாலையை மாற்றி மீண்டும் திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒருவேலை ஜோதிடம் தொடர்பாக பரிகாரத்திற்காக இப்படியொரு திருமணத்தை செய்துள்ளார்களா என்று ரசிகர்கள் கேள்விகேட்டு வருகிறார்கள்.