விவாகரத்தாகி 3 குழந்தைகள்! சீரியல் நடிகையை அந்த தொழில் செய்ய கூறிய நபர்

Serials
By Edward Apr 27, 2022 05:20 AM GMT
Report

வேலூரை சேர்ந்த பரமேஸ்வரி என்கிற பைரவி என்பவர் சின்னத்திரை சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார்.நடிகை பரமேஸ்வரியிடன் ராஜா தேசிங்கு என்பவர் இயக்குனர் என்று கூறி அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் பழகி நெருக்கமாக இருந்த நிலையில் கோவிலுக்கு கூட்டிச்சென்று கட்டாயப்படுத்தி தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். அதன்பின் பாலியல் தொல்ழி செய்ய பணத்திற்காக பரமேஸ்வரிய வற்புறுத்தியுள்ளார்.

இதை செய்யவில்லை என்றால் நடிகையையும் அவரது குழந்தைகளையும் கொன்று விடுவதாக கூறி மிரட்டியும் வந்துள்ளார். இதனால் டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகாரளிக்க சென்றுள்ளார் பரமேஸ்வரி.

டிஜிபி அலுவலகத்திற்கு வந்த பரமேஸ்வரி திடீரென மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதை கண்ட போலிசார் காப்பாற்றி இதுதொடர்பாக விசாரனை செய்து வருகிறார்கள்.