21 வயதில் மூத்தவருடன் திருமணம்!! கணவரை தாத்தா-னு கேலி செய்ததால் பொங்கும் சீரியல் நடிகை..
சினிமாவை பொறுத்தவரை நடிகைகளின் வயது அவர்களின் மார்க்கெட்டிற்கு மிகப்பெரிய பிளஸ். அதைவிட திருமணம் தான் அவர்கள் முக்கியமாக பார்க்கிறார்கள். திருமணத்திற்கு பின் நடிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக பல நடிகைகள் 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள்.
ஆனால் தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை திரைப்படன்கள், சீரியல்கள் என நடித்து வருகிறார் அந்த நடிகை. அவர் வேறு யாரும் இல்லை, கோலங்கள், மெட்டி ஒலி, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி தான்.
சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை நீலிமா, தன்னைவிட 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டு குழந்தையையும் பெற்றுகொண்டார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டேன் என்று தற்போது கணவருடன் சந்தோஷமாக வாழ்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், இணையத்தில் என் கணவரை தாத்தா என்று கேலி செய்து கமெண்ட்ஸ் செய்வார்கள். அதையெல்லாம் கண்டுகொண்டால் வாழ முடியாது, ஒரு விதத்தில் கஷ்டமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
தற்போது 30 வயதை எட்டியிருக்கும் நடிகை நீலிமா ரானி, ஆக்ஸ்ட் 16 1947 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.