மீண்டும் மாறு வேடத்தில் மயில்வாகனம்.. இந்த முறை கார்த்தியின் திட்டம் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Zee Tamil Tamil TV Serials
By Jai Sep 25, 2026 08:55 AM GMT
Report

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி கடத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மீண்டும் மாறு வேடத்தில் மயில்வாகனம்.. இந்த முறை கார்த்தியின் திட்டம் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Serial Karthigai Deepam September 25Th Episode

அதாவது விஷயம் அறிந்த கார்த்திக் சாமுண்டீஸ்வரி இருக்கும் குடோனை தேடி கண்டுபிடித்து அவரை காப்பாற்றுகிறான். ஆனால் சந்திரகலாவின் சூழ்ச்சியால் சாமுண்டீஸ்வரி இதுக்கெல்லாம் காரணம் நீதானே என கார்த்தியை கண்டபடி பேசிவிட்டு கிளம்புகிறாள்.

பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்ததும் கார்த்திக், மயில் வாகனம் ஆகியோர் உங்க திட்டம் பலிக்காமல் போயிடுச்சு என சந்திரகலாவை கிண்டல் அடிக்கின்றனர். இதையடுத்து முத்துவேல் ஒரு இடத்தில் நாளைக்கு எனக்கு ஒரு ஐயர் வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க இதை மயில்வாகனம் கேட்டு சந்தேகம் அடைகிறான். மறுநாள் முத்துவேல் சொன்ன நேரத்தில் ஐயர் வேஷத்தில் அந்த இடத்திற்கு சென்று விசாரிக்க அது சிவனாண்டி, சந்திர கலாவின் வீடு கிரகப்பிரவேசம் எனவும் தெரிய வருகிறது.

மீண்டும் மாறு வேடத்தில் மயில்வாகனம்.. இந்த முறை கார்த்தியின் திட்டம் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Serial Karthigai Deepam September 25Th Episode

உடனே மயில்வாகனம் கார்த்திக்கு இது குறித்த தகவலை கொடுக்கிறான். பிறகு கார்த்திக் ஒரு ஐடியாவை சொல்ல மறுநாள் சந்திரகலா வீடு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல மயில் வாகனம் ஐயர் வேடத்தில் அங்கு செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.