மன உளைச்சல்..சாக நினைத்து சினிமாவை விட்டு பயந்து ஓடிய சேது பட நடிகையின் கண்ணீர் கதை...
நடிகை அபிதா
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தான் சேது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை அபிதா. மலையாளியான அபிதா, சிறுவயதில் சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்க சென்றுள்ளா. அப்போது இயக்குநர் ஒருவர் அபிதாவை பார்த்துவிட்டு, நீ இந்த சீரியலில் நடிக்கிறாயா என்று கேட்டுள்ளார்.

அதன்பின், தன்னுடைய அம்மாவை அழைத்துவந்து அந்த இயக்குநருடன் பேசி சீரியலில் நடிக்க தொடங்கினார் அதன்பின் பல சீரியல்களில் நடித்த அபிதா, தன்னுடைய நிஜப்பெயரான ஜெனிலா என்பதை அபிதாவாக மாற்றினார்.
மன உளைச்சல்
இதனையடுத்து, சீறிவரும் காளை, உணர்ச்சிகள், அரசாட்டி, நம்நாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அபிதா, கிசுகிசுவால் மிகவும் மனவேதனைக்கு உள்ளானார். ராமராஜனுடன் சீறிவரும் காளை படத்தில் நடித்தபோது, நளினி - ராமராஜன் விவாகரத்துக்கு அபிதா தான் காரணம் என்று பத்திரிக்கைகளில் வெளியானது.
அதோடு மட்டுமில்லாமல், ஒரு பத்திரிக்கை நிறுவனம், உன்னைப்பற்றி இப்படி செய்து வெளியிட போகிறோம், அபடி அந்த செய்தி வெளியில் வரக்கூடாது என்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள்.

அபிதா, பணத்தைக் கொடுக்காததால், சேது அபிதா ஆடை அவிழ்க்க தயார் என்ற தலைப்பில் போஸ்டர்கள் வெளியாகி செய்தி வெளியானது. இதனால் மனமுடைந்து போன அபிதா, மன உளைச்சலுக்குள்ளாகி இனி சினிமாவே வேண்டாம் என்று பயந்து ஓடியது மட்டுமில்லாமல் செத்துவிடலாம் என்றும் யோசித்து சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.