மனோபாலாவை தொடர்ந்து இந்த காமெடி நடிகரும் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகினர்..
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் பல முக்கிய பிரபலங்களின் மரணம் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட பலரின் மரணத்தை தொடர்ந்து பிரபல நடிகர் செவ்வாழை ராசு மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான தாய் மனசு படத்தில் நடிக்க ஆரம்பித்த ராசு, அதனை தொடர்ந்து 7 ஆண்டுகளில் 21 படங்கள் வரை நடித்து வந்தார்.
பருத்திவீரன் படத்தில் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற செவ்வாழை ராசு, மைனா, கிழக்குச்சீமையிலே, கந்தசாமி, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு இன்று மரணமடைந்தது சோகத்தை ஆழ்த்தியிருக்கிறது.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் நடிக்க வரவில்லை என்றும் பொழுதுபோக்காக தான் நடிக்க ஆரம்பித்தேன் என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
மேலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் எதிர்மறையான ரோல் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை வேடங்களில் நடிக்கவே மாட்டேன் என்று பல வாய்ப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கியவர் தான் செவ்வாழை ராசு.