தளபதி ஏன் சுறா படத்தில் நடிச்சீங்க! செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா கொடுத்த ஷாக்..
பிரபல டிவி சேனலில் பல ஆணடுகளாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார் சீரியல் நடிகை ஷபானா.
சமீபத்தில் பாக்யலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சில விவாகரத்து கிசுகிசுக்கள் எழுந்தததை அடுத்து இருவரும் எந்த பிரச்சனையில்லாமல் சந்தோஷமாக இருக்கிறோம் என்று கூறி புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் பிரபல ரேடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றிய போது தளபதி விஜய்யை பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 11 வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் விஜய் நடித்த படத்தின் பிரமோஷனுக்காக மிர்சி அலுவலகத்திற்கு வந்திருந்திருந்தார்.
அப்போது என்னுடைய பெற்றோர்களை அறிமுகப்படுத்தினேன். திடிரென என் அம்மா அவரிடம் கதை கேட்பதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று கூறி அட்வைஸ் செய்தார்.
இதை விஜய் அவர்கள் கைக்கட்டி பணிவோடு மரியாதையுடன் ஏற்று அவரிடம் பல நாள் பழகியது போல் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார் என்று ஷபானா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
