மும்பைல செட்டிலானது வீணாகல? ஷாருக்கானை வெச்சு செஞ்சிட்டியே அட்லீ..
பிரம்மாண்ட இயக்குனர் சங்கருடன் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து வைத்தவர் அட்லீ. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யின் தெறி, மெர்சல், பிகினி போன்ற படங்களை கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
அப்படி பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்து விஜய்யின் மார்க்கெட்டை மாற்றினாலும் சில காட்சிகளால் அட்லீ காப்பி இயக்குனர் என்ற பேரும் வாங்கிவிட்டார். இதனால் விஜய் கூட அவருடன் இணைந்து பணியாற்ற தயங்கினார்.
அந்த சமயத்தில் பாலிவுட் சினிமாவின் கிங்கான் என்று கூறப்படும் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தினை இயக்க கமிட்டாகினார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த பிராஜெக்ட் ஆரம்பித்து அதற்காக அட்லீ மனைவியுடன் மும்பை ஓட்டலில் செட்டிலாகினார்.
படப்பிடிப்பு ஆரம்பித்த சில மாதங்களில் லாக்டவுன் , ஷாருக்கான் மகன் போதைப்பொருள் பிரச்சனை என தள்ளிக்கொண்டே சென்றது. ஒருகட்டத்தில் ஷாருக்கான் அட்லீ, நயன்தாரா கூட்டணி மூடப்பட்டது என்று கூறி செய்திகளும் வெளியானது.
ஆனால் திரும்பவும் அட்லீயை ஏமாற்றாமல் மீண்டும் ஷூட்டிங்கை கோவாவில் ஆரம்பித்தனர். இந்நிலையில் அட்லீ மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற தலைப்பில் படம் உருவாகியுள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பெயர் மற்றும் வெளியாகும் தேதியோடு சேர்த்து வீடியோவை வெளியிட்டு டிரெண்ட்டாக்கியுள்ளார். மும்பைல செட்டிலானது வீண்போகல அட்லீ என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.