ஷாருக்கானை நம்பினது ஏமாற்றம் தான் மிச்சம்! மனைவியோடு அங்கபோய் செட்டிலானியே அட்லீ..

atlee nayanthara shahrukh khan pathaan
By Edward Mar 11, 2022 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின், ராஜா ராணி படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றவர் அட்லீ. இதையடுத்து நடிகர் விஜய்யுடன், தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார். இப்படங்கள் மூலம் காப்பி இயக்குனர் என்று பேர் பெற்ற அட்லீ, தற்போது பாலிவுட் சினிமாவின் கிங்காங் ஷாருக்கானை வைத்து லயன் படத்தினை இயக்கி வருகிறார்.

அவருக்கு ஜோடியாக நடிகை நயன் தாரா கமிட்டாகி படப்பிடிப்பும் ஆரம்பமானது. இதற்காக ஷாருக்கான் செலவில் மும்பையில் பிரம்மாண்ட ஓட்டலில் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லியும் தங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் ஷாருக்கான் மகன் போதைபொருள் விஷயமாக கைது செய்யப்பட்ட விஷயத்தால் அப்படியே அந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. அட்லீ படத்தை எப்படியாவது எடுத்தே ஆகவேண்டும் என்று நினைக்கையில் பாலிவுட் இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் பதான் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டாராம் ஷாருக்கான்.

தற்போது இப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் மிகவும் சோகத்துடன் அவரது சமுகவலைத்தளத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம் உங்கள் வாழ்க்கையில் வரும். என்னை நம்பு அது கண்டிப்பாக வரும் என்று தெரிவித்துள்ளார்.