அந்த விசயத்தில் மாறிப்போன நயன் தாரா!! விக்னேஷ் சிவனுக்கு வார்னிங் கொடுத்த ஷாருக்கான்

Nayanthara Vignesh Shivan Shah Rukh Khan Jawan Actress
By Edward Jul 13, 2023 05:15 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தப்பின்னும் படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே கமிட்டாகிய ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.

அந்த விசயத்தில் மாறிப்போன நயன் தாரா!! விக்னேஷ் சிவனுக்கு வார்னிங் கொடுத்த ஷாருக்கான் | Shah Rukh Khan Warns Nayanthara Huband Jawan

சமீபத்தில் ஜவான் படத்தின் ப்ரிவ்யூ வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடிகை நயன் தாரா ஸ்டெண்ட் காட்சிகளில் நடித்து மிரட்டி இருக்கிறார்.

இந்நிலையில் படம் உருவாகியதற்கு அட்லீ, நயன் தாரா, அனிருத்திற்கு நன்றி கூறி டிவிட்டரில் பாராட்டி பதிவினை பகிர்ந்துள்ளார். ஆனால் விக்னேஷ் சிவன் ஜவான் படத்தினை வாழ்த்திய பதிவினை டேக் செய்து ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார் ஷாருக்கான்.

அந்த விசயத்தில் மாறிப்போன நயன் தாரா!! விக்னேஷ் சிவனுக்கு வார்னிங் கொடுத்த ஷாருக்கான் | Shah Rukh Khan Warns Nayanthara Huband Jawan

அதில், உங்கள் அன்புக்கு நன்றி விக்னேஷ் சிவன். நயன் தாரா மிகவும் அருமையானவர் என்றும் ஆனால் தற்போது அவர் நடிக்கவும் உதைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார் அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள், ஏற்கனவே உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என கூறியிருக்கிறார்.

இதற்கு விக்னேஷ் சிவன், ஆமாம் ஜாக்கிரதையாக தான் இருக்கிறேன் சார். ஆனால் அதே நேரத்தில் காதல் மன்னனிடம் ரொமான்ஸ் செய்யவும் கற்றுக்கொண்டார் என்று விக்னேஷ் சிவன் ரீப்ளே செய்துள்ளார்.