ரூ. 6300 கோடி சொத்து!! வீட்டு பணியாளர்களுக்கு வீட்டு வாடகை கொடுக்கும் ஷாருக்கான்!! இத்தனை லட்சமா?

Shah Rukh Khan Actors Bollywood Net worth
By Edward Jun 14, 2025 09:45 AM GMT
Report

ஷாருக்கான்

இந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஷாருக்கான், தற்போது கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் டாப் பணக்கார நடிகர்கள் லிஸ்ட்டில் 6,300 கோடி ரூபாய்க்குமேல் சொத்து மதிப்போடு முதலிடத்தில் இருக்கிறார். பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், சல்மான் கான் உள்ளிட்டவர்களின் வீடு காலக்ஸி அபார்ட்மெண்ட்டில் இருக்கிறது. அதேபோல் ஷாருக்கானுக்கு சொந்தமான மும்பை மன்னத் வீடும் இருக்கிறது.

மன்னத் வீடு

அந்த விட்டில் தற்போது புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் ஷாருக்கான் தன் குடும்பத்துடன் பாந்த்ராவில் இருக்கும் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். இந்த புதுப்பிப்பு பணிகள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நடைபெறவிருந்த நிலையில் ஷாருக்கான் மனைவி கவுரி கான், மேலும் இரு தளங்களை கட்ட திட்டிமிட்டுள்ளாராம்.

ரூ. 6300 கோடி சொத்து!! வீட்டு பணியாளர்களுக்கு வீட்டு வாடகை கொடுக்கும் ஷாருக்கான்!! இத்தனை லட்சமா? | Shah Rukh Khans Pays Staff House Rent Lakhs

27 ஆயிரம் சதுர அடி கொண்ட பழங்காலத்து வீடான இந்த வீட்டை 2001ல் ஷாருக்கான், 13 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்த வீடு 24 ஆண்டுகள் கழித்து தற்போது 200 கோடி ரூபாய் மதிப்பாகும். மன்னத் பங்களாவின் உண்மையான பெயர் வில்லா வியன்னா என்பதாகும்.

ரூ. 6300 கோடி சொத்து!! வீட்டு பணியாளர்களுக்கு வீட்டு வாடகை கொடுக்கும் ஷாருக்கான்!! இத்தனை லட்சமா? | Shah Rukh Khans Pays Staff House Rent Lakhs

வாடகை

இந்த விட்டில் நிறைய படுக்கையறைகள், ஜிம், நீச்சல் குளம், நூலகம் உள்ளிட்டவை இருக்கிறது. தற்போது புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் ஷாருக்கான் குடும்பத்தினருடன் 24 லட்சம் ரூபாய் வாடகைக்கு சென்றுள்ளார். அவரின் வீட்டுப்பணியாளர்களுக்கென மன்னத் வீட்டிலேயே தனி குடியிருப்புகள் இருந்ததாம்.

இந்நிலையில் ஷாருக்கே வாடகை வீட்டிற்கு வந்ததால் வீட்டு பணியாளர்களுக்கு ரூ. 1.35 லட்சம் மாத வாடகையில் வீடு எடுத்து கொடுத்துள்ளார் ஷாருக். இந்த வீட்டின் வாடகையை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாருக்கானை ஓஹோ என பாராட்டி வருகிறார்கள்.

ரூ. 6300 கோடி சொத்து!! வீட்டு பணியாளர்களுக்கு வீட்டு வாடகை கொடுக்கும் ஷாருக்கான்!! இத்தனை லட்சமா? | Shah Rukh Khans Pays Staff House Rent Lakhs

வீட்டு பணியாளர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் பாட்ஷா என்றால் சும்மாவா என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.