ஒரே ஒரு கேட்ச் தான்டா விட்ட அதுக்கு மூணு சீக்ஸ்-ஆ அடிப்ப.. கதறும் பாகிஸ்தான் வீரர்..

cricket shaheenafridi
By Edward Nov 13, 2021 08:40 AM GMT
Report

T20 உலகக்கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி போட்டி நடக்கவுள்ளது. இதில் ஏற்கனவே இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறி பல விமர்சனங்களை சந்தித்தனர்.

இந்தவாரம் நடந்த அரை இறுதி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தோற்று வெளியேறி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் 11 நாளன்று பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த அரை இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 176 ரன்களை எடுத்து இலக்கை நிற்ணயித்தது.

2வது பேட் செய்த ஆஸ்திரேலியா 19 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து இறுதி போட்டியில் நுழைந்தது. இந்த ஆட்டத்தின் போது ஷாஹீன் அப்ரீடி செய்த தவறால் இறுதி சுற்றுக்கு போகும் வாய்ப்பை தவற விட்டிருக்கிறது பாகிஸ்தான்.

முன்னதாக பந்து வீசிய ஷாஹீன் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேனை கிண்டல் செய்தபடியே பந்துகளை வீசினார். இதனை தொடர்ந்து அதற்கு பதிலடியாக 19-வது ஓவரில் ஷாஹீன் வீசிய பந்தில் தொடர்ந்து மூன்று சிக்ஸ்கள் அடித்து தெரிக்க விட்டார் மேத்யூ வெட். ஷாஹீனின் இந்த செயல் ரசிகர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.