அந்த இயக்குனர் என்னை படம் முழுவதும் பாவாடை கட்ட சொன்னார், ஷாருக்கான் பகிர்ந்த ஷாக்கிங் பதில்
Shah Rukh Khan
By Tony
ஷாருக்கான்
ஷாருக்கான் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களுமே ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் ஷாருக்கான் அடுத்து கிங் என்ற படத்தில் நடிக்கவுள்ளார், தற்போது ஷாருக்கான் இயக்குனர் கரண் ஜோகர் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
கரண் ஜோகர் மற்றும் ஷாருக்கானும் நெருங்கிய நண்பர்கள், கரண் இயக்கத்தில் ஷாருக் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
இதில் ஷாருக் கூறுகையில், ‘கரண் ஒரு முறை என்னிடம் ஒரு கதையை எடுத்துக்கொண்டு வந்தார், அந்த கதையை கூறிவிட்டு படம் முழுவதும் நீங்கள் பாவாடை கட்டி நடிக்க வேண்டும் என்றார்.
அந்த நொடியே நான் அந்த படத்திலிருந்து விலக முடிவெடுத்துவிட்டேன்’ என ஷாருக்கான் கூறியுள்ளார்.