குருநாதர் சங்கருக்கே இவ்வளவு தான்! ஷாருக்கான் படத்தில் அட்லீயின் சம்பளம் எவ்வளவு கோடி தெரியுமா?

flim salary atlee Shahrukh Khan shankar
By Jon Mar 23, 2021 02:42 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்தவர் இயக்குநர் சங்கர். கோடிகளில் பெரிய பட்ஜெட் படமாக இயக்கிய சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. உதவி இயக்குநராக இருந்து பின் ராஜா ராணி படத்தினை முதன்முதலாக இயக்கிய பெரிய ஹிட் படமாக அமைந்தது அட்லீக்கு.

இதையடுத்து விஜய்யின் தெறி படத்தினை இயக்க அதுவும் ஹிட் கொடுத்ததால், மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹார்ட்டிக் படம் கொடுத்தார். மேலும் காப்பி இயக்குநர் என்ற பெயரை பெற்று கேலி கிண்டலுக்கு ஆளாகினார். ஆனால், இந்த சர்ச்சைகள் அவரை பெரிதாக பாதிக்கவில்லை. இதையடுத்து அவர் படத்தில் 20கோடி வாங்கினார். இந்நிலையில், அட்லீ தற்போது நேரடியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இதற்காக அட்லீக்கு 35 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இது தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வரும் ஷங்கரை விட 10 கோடி அதிகம் என்கிறார்கள் சம்பள விவரம் தெரிந்த கோலிவுட் வாசிகள். ஷங்கர் கடைசியாக இயக்கிய கொண்டிருந்த இந்தியன் 2 படத்திற்கு வாங்கிய சம்பளம் 25 கோடி.

இந்த 25 கோடி சம்பளம் வாங்குவதற்கு ஷங்கர் 25 வருடம் தமிழ் சினிமாவில் போராடினார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஷங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து தற்போது சம்பள விஷயத்தில் குறுகிய காலத்தில் அவரையே ஓரம் கட்டி அட்லீயை உண்மையில் பாராட்டித்தான் ஆக வேண்டும்.