பீஸ்ட் பட படப்பிடிப்பில் புகைத்து தள்ளிய இயக்குனர்! அவர் பக்கமே செல்லாத நடிகர்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். சில தினங்களுக்கு முன் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.
முதல் நாளில் படைத்த சாதனை வசூல் அடுத்தடுத்த நாட்களில் படுபயங்கரமாக குறைய ஆரம்பித்து விட்டது. தற்போது பீஸ்ட் ஸ்கிரீன்கள் குறைக்கப்பட்டு கேஜிஎஃப் 2 படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் செல்வராகவனுடன் பயணிக்கும் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்த Shaji Chen பேட்டி கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முதல் நாள் ஆரம்பித்து தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஷூட்டிங்கின் முதல் நாளின் போது செல்வராகவனுக்கும் எனக்கும் இடையில் சில பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின் அவரே சரிபார்த்து விலகிவிட்டார். பின் ஷூட்டிங் சமயத்தில் அவரை பார்த்து பேசுனது அவ்வளவாக இல்லை. அவர் தம் அடிப்பார்.
எனக்கு புகைப்பிடிப்பது பிடிக்காது என்பதால் அவர் பக்கமே செல்லமாட்டேன். படத்தின் கதாபாத்திரம் எப்படி எனிமியாக இருக்குமோ அப்படியே ஷூட்டிங்கில் இருந்தேன் என்று கூறியுள்ளார் நடிகர் ஷாஜி சென்.