போதைப்பொருள் கொடுத்து நடிகைக்கு பாலியல் வன்கொடுமை!! 73 வயது தயாரிப்பாளர் கைது..
1991, 1993ல் வெளியான விஷ்ணு-தேவா, ஸ்ரீமான் ஆஷிக் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ஷகீல் நூரானி அதன்பின் 1999ல் படே தில்வாலா படத்தினை இயக்கினார். அதன்பின் 2002ல் ஜோரு கா குலாம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்தார். அவர் மீது 33 வயது நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளது அதிர்ச்சியை அளித்தது.

ஷகீல் நூரானி
பட வாய்ப்பு தேடிச் சென்றபோது சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார். சில சந்தர்ப்பங்களில் தனக்கு போதைப்பொருல் கொடுத்து, தான் மயக்கமடைந்தபோது ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அந்த நடிகை புகாரளித்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோகளை காட்டி, தன்னுடைய பாலியல் இச்சைக்கு பிளாக்மெயில் செய்ததாகவும் கூறினார்.
இதற்கிடையில் தனக்கு கருச்சிதைவு நடந்ததாகவும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நடிகையின் புகாரில் பேரில் இயக்குநர் ஷகீல் நுரானி மீது மல்வானி போலிசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த நூரானி 40 நாட்களாக தலைமறைவாகினார்.

கைது
இந்நிலையில் நுரானி, சதாரா மாவட்டத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே மல்வானி போலிசார் அங்கு சென்று நூரானியை கைது செய்து, நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள், பிளாக்மெயில் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.