ஷகிலா-வா வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கிய மால் நிர்வாகம்.. கோபத்தில் கொந்தளித்த நடிகை..
மலையாள சினிமாவில் கவர்ச்சி புயலாக பிரபலமாகி தென்னிந்திய சினிமாவில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ஷகிலா. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.
இந்நிலையில் இயக்குமர் ஓமர் லுலு இயக்கத்தில் நல்ல சமயம் என்ற படம் 25 ஆம் தேதி மலையாள மொழியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுகாக கேரளா மாநிலத்தில் கோழிக்கோட்டில் இருக்கும் ஹை லைட் வணிக வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஷகிலா அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் மால் நிர்வாக ஷகிலாவை கலந்துக்கொள்ள அனுமதி மறுத்துள்ளது. இதற்கான காரணம் நிவின் பாலி நடிப்பில் சாட்டர்டே நைட் என்ற படத்தின் பிரமோஷன் இந்த மாலில் நடந்தது.
அப்போது படத்தில் நடித்த இரு நடிகைகளிடம் ரசிகர்கள் எல்லைமீறி நடந்து கொண்டனர்.

இந்த சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து நடிகை ஷகிலாவும் வந்தால் அப்படியான சம்பவம் ஏற்பட்டு விடும் என்று மால் நிர்வாகம் விளக்கமளித்துள்ளனர்.
ஷகிலா இல்லாமல் இந்த நிகழ்ச்சியே வேண்டாம் என்று படக்குழு நிகழ்ச்சியை கேன்சல் செய்திருக்கிறார்கள். இதனை கேள்விப்பட்ட நடிகை ஷகிலா, இதேபோன்ற சம்பவத்தை நான் முன்பே எதிர்கொண்டேன்.
இந்த நிகழ்ச்சிக்காக கோடிக்கோடு வருகிறேன் என்ற செய்தி வெளியானதும் பலர் என்னை காயப்படுத்த ஆரம்பித்தனர். இந்த நிலைக்கு என்னை தள்ளியதே நீங்கள் தான் என்னை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று உருக்கமாக ஷகிலா கூறியுள்ளார்.