10 வயதில் 2, 3 பேரை காதலித்தேன்!! பல ஆண்டுகள் கழித்து உண்மையை உடைத்த நடிகை ஷகீலா..
மலையாள சினிமாத்துறையில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு பின் கொடிக்கட்டி பறந்த நடிகை ஷகீலா. தன்னுடையை கவர்ச்சிக்கரமான பிம்பத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை உடைத்தெரிந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்ற நடிகை ஷகீலா, சமீபகாலமாக பிரபலங்களை பேட்டியெடுத்து சில பேட்டிகளில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டும் வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றி, தன் சிறுவயது காதல் அனுபவங்களை பற்றிய உண்மையை பல ஆண்டுகள் கழித்து கூறியிருக்கிறார்.
நான் 10 வயதில் இருக்கும் போது 13 வயதுள்ள சூரி ரெட்டின் என்ற ஒருவனை காதலித்ததாகவும். அதில் ஒரு பப்பி லவ்வாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று பேரை காதலித்ததாகவும் என் உறுவினர் ஒருவர் என்னிடம் ரெண்டு பேரில் யாரை காதலிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு நான் வீட்டில் இவன் ஸ்கூலில் அவன் என்று கூறினேன்.

அதன்பின், இன்னொருவர் ஒரு நடிகர். எல்லோருக்கும் தெரியும், அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. பின், இப்போது அவருக்கு கல்யாணமாகிடுச்சி கஷ்டப்பட்டு வருகிறார். நான் ஒருமுறை கால் செய்யும் போது அவர் பொண்ணாட்டி செய்த செயலை பார்த்து ஆனந்தமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் ஷகீலா.
இன்னொருவர் அமெரிக்காவில் இருக்கிறார், மார்ச் 30ஆம் தேதி கடைசியாக பார்த்தேன். அதன்பின் டிசம்பர் மாதம் அவருக்கு கல்யாணமாகிவிட்டது. அவரைதான் 10 வருடங்களாக காதலித்தேன். எல்லோருக்கும் நான் பல உதவிகளை செய்திருக்கிறேன்.
அமெரிக்காவில் இருப்பவர் கோமா ஸ்டேஜிற்கு செல்லும் அளவிற்கு சென்ற போது நான் கடவுளிடம் பிரேயர் செய்திருக்கிறேன், இப்போது அவர்கள் கஷ்டப்படும் போது பெருமையாக இருக்கிறது என்று நடிகை ஷகீலா கூறியுள்ளார்.