அக்கா மகன் கல்யாணத்தில் அவமானப்படுத்திய மணப்பெண்.. செருப்பால அடிப்பேன்னு..!! நடிகை ஷகீலா..
ஷகீலா
தென்னிந்திய சினிமாவில் 18+ படங்களில் நடித்து அதன்பின் திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷகீலா அம்மா என்ற பெயரோடு இணையத்தில் பயணித்து வருகிறார்.
பலருக்கும் உதவி வரும் நடிகை ஷகீலா, தன்னுடைய உறவினர்களால் அவமானப்படுத்தப்பட்டு அழத சம்பவத்தை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அவமானப்படுத்திய மணப்பெண்
என் அக்கா மகன் திருமணத்திற்கு எனக்கு பத்திரிக்கை கொடுத்து புடவை கொடுத்து வரச்சொன்னாங்க. நானும் மேடைக்கு போனபோது கல்யாணப் பொண்ணு மேடைல இல்ல. என்னை கீழ உட்காரச்சொன்னாங்க. எங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்திருக்காங்க.
10 நிமிஷத்துக்கு பின் நான் கீழே இறங்கிய போது அந்த பொண்ணு மேல வருது. என் அக்கா பையன எம் ஆர் படிக்க வைத்ததே நான் தான். நான் கொடுத்த கிஃப்-ஐ கிஃப் கையல வாங்கி லெஃப்ட் கையல அங்க கொடுத்து என்னை அறிமுகமும் செஞ்சு வெக்கல. இதனால் மேடையிலே அழுக வந்திருச்சு.
இறங்கி அப்படியே காருக்கு போன போது பின்னாடி சொந்தக்காரங்க வந்தாங்க. செருப்பாலயே அடிப்பேன்னு சொல்லி காருக்கு போனேன்.
பின் பக்கத்தில் இருந்த பீச்சில், இருந்து ஒரு நம்பருக்கு கால் செய்தேன், அது அவர் தான் (நடிகர் ரிச்சர்ட்). எனக்கு மனப்பாடமா இருக்கும் ஒரேவொருவரின் நம்பர் என்றால் அவர் நம்பர் மட்டும் தான்.
அவர் தான் அங்கு பக்கத்தில் இருந்து உடனே வந்து ஆறுதல் கூறினார் என்று ஷகீலா தெரிவித்துள்ளார்.